மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டு தடை விதித்தது ஐசிசி!

மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை முன்னாள் வீரருக்கு ஆறு ஆண்டு தடை விதித்தது ஐசிசி!

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் ஜோய்ஸாவுக்கு ஆறு ஆண்டு தடை விதித்துள்ளது ஐசிசி. 

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் ஜோய்ஸாவுக்கு ஆறு ஆண்டு தடை விதித்துள்ளது ஐசிசி. 

இலங்கை அணிக்காக 30 டெஸ்டுகளும் 95 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ள நுவான் ஜோய்ஸா, 172 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு இலங்கை ஏ அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் போட்டியிலும் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அப்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்தது. இதையடுத்து புகாரை விசாரணை செய்தது ஐசிசி. 

இந்நிலையில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 42 வயது ஜோய்ஸாவுக்கு ஆறு ஆண்டு தடை விதித்துள்ளது ஐசிசி. 2018 அக்டோபரில் ஜோய்ஸாவுக்கு ஐசிசி இடைக்காலத் தடை விதித்த நிலையில் தற்போது ஆறு ஆண்டு காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஏ அணியின் பயிற்சியாளராக ஜோய்ஸா செயல்பட்டபோது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடும்படி வீரர்களிடம் கூறியுள்ளார். 2017-ல் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் விருப்பப்படி இச்செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். பயிற்சியாளர் என்பதால் அணியின் திட்டங்கள் பற்றி ஜோய்ஸாவுக்குத் தெரியும். எனவே மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய ஜோய்ஸாவை அணுகியுள்ளார்கள். அதன்படி ஒரு ஓவரில் பந்துவீச்சாளர் இத்தனை ரன்கள் கொடுக்க வேண்டும், ஒரு பேட்ஸ்மேன் வேண்டுமென்றே ஆட்டமிழக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வீரர்களை அணுகியுள்ளார் ஜோய்ஸா. அவர் சொன்னபடி செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். எனினும் இதற்கு குறிப்பிட்ட வீரர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளின்படி ஜோய்ஸாவுக்கு ஆறு ஆண்டு காலத் தடை விதிக்கப்படுகிறது என ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com