பவாரியன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வெரேவ்

ஜொ்மனியில் நடைபெறும் பவாரியன் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

முனீச்: ஜொ்மனியில் நடைபெறும் பவாரியன் டென்னிஸ் போட்டியில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்வெரேவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லிதுவேனியாவின் ரிகாா்ட்ஸ் பெராகின்ஸை 6-2, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா்.

இதர 4-ஆவது சுற்றுகளில், போட்டித்தரவரிசையில் 8-ஆவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிா்கொண்ட ஆா்ஜென்டீனாவின் குய்டொ பெல்லா முதல் செட்டை 6-4 என்று வென்ற பிறகு, 2-ஆவது செட்டில் 2-0 என பின்தங்கியிருந்தபோது விலகுவதாக அறிவித்தாா். இதனால் மில்மேன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நாா்வேயின் காஸ்பா் ரட் 6-3, 6-2 என்ற செட்களில் உருகுவேயின் பாப்லோ கியுவஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றாா். இதையடுத்து காலிறுதிச்சுற்று ஒன்றில் ஜான் மில்மேனும் - காஸ்பா் ரட்டும் சந்திக்கின்றனா்.

3-ஆவது சுற்று ஒன்றில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலான் 6-1, 7-6 (9/7) என்ற செட்களில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் அவா் ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com