டி20 தரவரிசை:  5-ஆவது இடத்தில் நிலைக்கும் கோலி

ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார். 
டி20 தரவரிசை:  5-ஆவது இடத்தில் நிலைக்கும் கோலி


துபை: ஐசிசியின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார். 
பாகிஸ்தான்-ஜிம்பாப்வே இடையேயான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில் புதிதாக வெளியான தரவரிசையின்படி, கோலி 762 புள்ளிகளுடன் அந்த இடத்தில் இருக்கிறார். சக வீரரான கே.எல்.ராகுல் 743 புள்ளிகளுடன் தனது 7-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 
பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 640 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 
இப்பிரிவில் இங்கிலாந்தின் டேவிட் மலான் (892), ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச் (830), பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (828) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். 
பெளலர்கள், ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் எந்த மாற்றமும் இல்லை. அவற்றில் முதல் 10 இடங்களுக்குள்ளாக இந்திய வீரர்கள் எவரும் தற்போதைய நிலையில் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com