டோக்கியோ ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய தடகள அணி பங்கேற்க இயலாத நிலை

போலாந்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உலக தடகள ரிலே போட்டியில் இந்திய அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


புது தில்லி: போலாந்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உலக தடகள ரிலே போட்டியில் இந்திய அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்து அரசும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 
இந்தியாவிலிருந்து போலாந்துக்கு நேரடி விமானங்கள் இல்லாததால், நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கிருந்து இணைப்பு விமானம் மூலமாக போலாந்து செல்ல இந்திய அணியினருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது நெதர்லாந்து அரசு இந்திய விமானங்களுக்கு தடை விதித்ததால், இந்திய அணியினர் ஆம்ஸ்டர்டாம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 
இந்த விவகாரம் தொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர்களுடன் பேசிய போதிலும் அதற்கு தகுந்த பலன் ஏதும் கிடைக்கவில்லை என்று இந்திய தடகள சம்மேளன தலைவர் அடிலே சுமரிவாலா கூறினார்.  இந்த அணியில் ஹீமா தாஸ், டூட்டி சந்த், எஸ்.தனலட்சுமி, அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி டி.ஏ., ஹிமாஸ்ரீ ராய் ஆகிய வீராங்கனைகளும், முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ், அமோஜ் ஜேக்கப், நிர்மல் நோவா டாம், சார்தக் பாம்ப்ரி ஆகிய வீரர்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com