டெல்லியை வீழ்த்துமா கொல்கத்தா?

ஐபிஎல் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை களம் காணுகின்றன. 
டெல்லியை வீழ்த்துமா கொல்கத்தா?

ஆமதாபாத்: ஐபிஎல் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை களம் காணுகின்றன. 
இரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் கொல்கத்தா 2 வெற்றிகளையும், டெல்லி 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. 
கொல்கத்தாவைப் பொருத்தவரை, தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் கடைசி ஆட்டத்தில் வென்றுள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை இன்னும் சோபிக்காத நிலையிலேயே இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் கேப்டன் மோர்கன் சற்று சிறப்பாக ஆடினார். தொடக்க வீரர் ஷுப்மன் கில் இன்னும் தனது ஃபார்மை எட்டவில்லை. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நிதீஷ் ராணா, கடந்த சில ஆட்டங்களில் தடுமாறுகிறார். 
எனவே, ராகுல் திரிபாதி - சுனில் நரைன் கூட்டணியைக் கொண்டு இன்னிங்ûஸத் தொடங்குவது நல்லதொரு தேர்வாகும். மிடில் ஆர்டரில் மோர்கன், ரஸ்ùஸல், தினேஷ் கார்த்திக் வலு சேர்ப்பவர்களாக இருக்கின்றனர். பெளலிங்கைப் பொருத்தவரை சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி கடந்த ஆட்டங்களைப் போலவே இதிலும் சிறப்பாகப் பந்துவீசுவார்கள் என 
எதிர்பார்க்கலாம். 
டெல்லியைப் பொருத்தவரை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் பெங்களூரிடம் ஒரு ரன்னில் தோற்றது. கேப்டன் பந்த் - ஷிம்ரன் ஹெட்மயர் கூட்டணி அந்த ஆட்டத்தில் அட்டகாசமாக விளையாடியிருந்தது. டெல்லி பேட்டிங் வலுவானதாகவே இருக்கிறது. பிருத்வி ஷா - தவன் நல்லதொரு தொடக்கத்தை அளிக்கின்றனர். 
மிடில் ஆர்டரில் பந்த், ஸ்மித்துடன் தற்போது ஹெட்மயரும் நம்பிக்கை அளிக்கிறார். சென்னைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு ரஸ்ùஸல் தனது அதிரடி ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தவில்லை. 
அஸ்வினுக்குப் பதிலாக இணைந்திருக்கும் இஷாந்த் சர்மா வேகப்பந்துவீச்சில் வலு சேர்க்கிறார். அவர் தவிர ரபாடா, அவேஷ் கானும் இருக்க, சுழற்பந்துவீச்சுக்கு அக்ஸரும், அமித்தும் தயாராக இருக்கின்றனர். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

மோர்கன் (கேப்டன்),
 தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில், 
நிதீஷ் ராணா, டிம் செய்ஃபெர்ட், 
ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸ்ùஸல், 
சுனில் நரைன், குல்தீப் யாதவ், 
ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், 
பேட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோடி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா, 
ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, ஷகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹர்பஜன் சிங், 
கருண் நாயர், பென் கட்டிங், 
வெங்கடேஷ் ஐயர், பவன் நெகி. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் 

ரிஷப் பந்த் (கேப்டன்), 
ஷிகர் தவன், பிருத்வி ஷா, 
அஜிங்க்ய ரஹானே, ஷிம்ரன் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிறிஸ் வோக்ஸ், 
அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா, 
லலித் யாதவ், பிரவீண் துபே, 
ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, 
இஷாந்த் சர்மா, அவேஷ் கான், 
ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், 
ரிபல் படேல், விஷ்ணு வினோத், 
லுக்மன் மேரிவாலா, எம்.சித்தார்த், 
டாம் கரன், சாம் பில்லிங்ஸ். 


நேருக்கு நேர்


கொல்கத்தா - டெல்லி அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 27 ஆட்டங்களில் மோதியுள்ள நிலையில், கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com