மும்பையை வெல்லுமா ராஜஸ்தான்?

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் வியாழக்கிழமை சந்திக்கின்றன. 
மும்பையை வெல்லுமா ராஜஸ்தான்?

புது தில்லி: ஐபிஎல் போட்டியின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் வியாழக்கிழமை சந்திக்கின்றன. 
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள இரு அணிகளுமே தலா 2 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே, 3-ஆவது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிர முனைப்பு காட்டும். 
மும்பையைப் பொருத்தவரை, தொடர்ந்து இரு தோல்விகள் கண்ட நிலையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. அந்த அணியின் மிடில் ஆர்டர் இன்னும் பெரிதாக சோபிக்காத நிலையிலேயே இருக்கிறது. சூர்யகுமார், இஷான், பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட் என அதிரடி வீரர்கள் வரிசையாக இருந்தும், அவர்கள் தங்களது வழக்கமான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. 
ரோஹித் - டி காக் நல்ல தொடக்கத்தை அளிக்கின்றனர். பெளலிங்கைப் பொருத்தவரை போல்ட், பும்ரா கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை தயக்கமின்றி திணறடிக்கிறது. குறிப்பாக டெத் ஓவர்களிலும் அவர்கள் அருமையாகப் பந்துவீசுகின்றனர். இதுதவிர ராகுல் சாஹர், கிருணால், பொல்லார்ட் ஆகியோரும் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். 
ராஜஸ்தானைப் பொருத்தவரை, கடைசி ஆட்டத்தில் கண்ட வெற்றி அளிக்கும் உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ஆன்ட்ரு போன்றோர் இல்லாதது அந்த அணிக்கு இழப்பாகிறது. நல்லதொரு தொடக்க கூட்டணியை இன்னும் அந்த அணி நிர்ணயிக்காதது பின்னடைவே. 
கேப்டன் சாம்சன், பட்லர் நிலையான ரன் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். மனன் வோரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக ஸ்கோர் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். அடுத்த இடங்களில் வரும் துபே, மில்லர், பராக் இன்னும் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவலாம். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸூக்கும் நெருக்கடி அதிகரிக்கிறது. 
பெளலிங்கில் சேத்தன் சகாரியா, உனத்கட், முஸ்டாஃபிஸூர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். தெவாதியா, ஷ்ரேயஸ் ஆகியோரும் விக்கெட் வீழ்த்தினால், முந்தைய பெளலர்களுக்கான பணிச்சுமை குறையும். 

மும்பை இண்டியன்ஸ்


ரோஹித் சர்மா (கேப்டன்), 
ஆடம் மில்னே, ஆதித்யா தாரே, 
அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், 
அர்ஜுன் டெண்டுல்கர், கிறிஸ் லின், 
தவல் குல்கர்னி, ஹார்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஜேம்ஸ் நீஷம், 
ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், 
கிரன் பொல்லார்ட், கிருணால் பாண்டியா, மார்கோ ஜென்சென், மோசின் கான், 
நேதன் கோல்டர்நீல், பியூஷ் சாவ்லா, குவின்டன் டி காக், ராகுல் சாஹர், 
செளரவ் திவாரி, சூர்யகுமார் யாதவ், டிரென்ட் போல்ட், யுத்வீர் சிங். 


ராஜஸ்தான் ராயல்ஸ்


சஞ்சு சாம்சன் (கேப்டன்), 
ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்,
 மனன் வோரா, அனுஜ் ராவத்,
ரியான் பராக், டேவிட் மில்லர், 
ராகுல் தெவாதியா, மஹிபால் லோம்ரோர், 
ஷ்ரேயஸ் கோபால், மயங்க் மார்கண்டே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனத்கட், 
கார்திக் தியாகி, ஷிவம் துபே, 
கிறிஸ் மோரிஸ், 
முஸ்டாஃபிஸூர் ரஹ்மான், 
சேத்தன் சகாரியா, கே.சி.கரியப்பா,
குல்திப் யாதவ், ஆகாஷ் சிங். 

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இரு அணிகளும் தலா 12 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com