மகளிர் டி20 சேலஞ்ச் நடைபெற வாய்ப்பில்லை?

ஐபிஎல் போட்டியை ஒட்டி நடத்தப்படும் மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறின. 

புது தில்லி: ஐபிஎல் போட்டியை ஒட்டி நடத்தப்படும் மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறின. 
இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ள சூழலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "டி20 சேலஞ்ச் போட்டிக்காக இந்திய மகளிர் அணியை தனிமைப்படுத்துவதென்பது இப்போதும் ஒரு பிரச்னையே கிடையாது. ஆனால், இந்தியாவில் தற்போது இருக்கும் கரோனா சூழல் காரணமாக எந்தவொரு வெளிநாட்டு வீராங்கனைகளும் இந்தியா வருவதற்கு தயாராக இல்லை. மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் அனைத்தையும் தில்லியில் தான் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போது தில்லியில் இருக்கும் கரோனா சூழல் எவருக்கும் அச்சம் தரலாம் என்பதால் வெளிநாட்டு அணியினர் அச்சப்படுவதில் தவறில்லை. எனவே, நடப்பாண்டு மகளிர் டி20 சேலஞ்ச் நடைபெறாமல் போகவும் வாய்ப்புள்ளது' என்றன. 
மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியானது சூப்பர்நோவாஸ், வெலாசிட்டி, டிரையல்பிளேசர்ஸ் ஆகிய 3 அணிகளைக் கொண்டு நடைபெறும். இதில் இந்திய வீராங்கனைகளுடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளின் வீராங்கனைகளும் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com