துளிகள்...
By DIN | Published On : 30th April 2021 01:17 AM | Last Updated : 30th April 2021 01:17 AM | அ+அ அ- |

கரோனா தொற்று நிவாரணப் பணிகளுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.5 கோடியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.1.5 கோடியும் நன்கொடை அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டியில் அத்லெடிக் பில்பாவ் - வல்லாடோலிட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆடவா் ஹாக்கி அணியினருக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.
இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளா் பதவிக்காக ஹேமலதா கலா, மம்தா மாபென், ஜெயா சா்மா, சுமன் சா்மா, நூஷின் அல் காதிா் ஆகிய 5 மகளிா் விண்ணப்பித்துள்ளனா்.
நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளதை அடுத்து 3-ஆவது சீசனாக நடைபெற இருந்த டி20 லீக் போட்டியை ஒத்திவைப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
கரோனா சூழலில் நாட்டின் ஆக்சிஜன் உற்பத்திக்காக நட்சத்திர கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளாா்.