பூரனின் சிக்ஸர் அதிரடி வீண்: ஹபீஸ் சுழலால் டி20யில் பாகிஸ்தான் வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூரனின் சிக்ஸர் அதிரடி வீண்: ஹபீஸ் சுழலால் டி20யில் பாகிஸ்தான் வெற்றி


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அந்த அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் முகமது ரிஸ்வான் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். ஷர்ஜீல் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரிஸ்வானுடன் கேப்டன் பாபர் அசாம் இணைந்தார். இந்த இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அரைசதம் அடித்த பாபர் அசாம் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிதளவில் ரன் சேர்க்கவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளுக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. முகமது ஹபீஸ் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ஆண்ட்ரே பிளெட்சர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு, மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிகோலஸ் பூரன் மட்டும் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார்.

எனினும், அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்மூலம், பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய ஹபீஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com