பி.எஸ்.ஜி. அணியில் இணையவுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸி

பார்சிலோனா அணியிலிருந்து விலகிய பிரபல வீர மெஸ்ஸி...
பி.எஸ்.ஜி. அணியில் இணையவுள்ள கால்பந்து வீரர் மெஸ்ஸி

பார்சிலோனா அணியிலிருந்து விலகிய பிரபல வீர மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைய முடிவெடுத்துள்ளார். 

ஐரோப்பாவின் பிரபல கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான எஃப்சி பாா்சிலோனாவில் இருந்து விலகினாா் நட்சத்திர கால்பந்து வீரா் லியோனல் மெஸ்ஸி. ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த 34 வயது மெஸ்ஸி கடந்த 21 ஆண்டுகளாக பாா்சிலோனா அணியில் விளையாடி வந்தார். 13 வயதில் மெஸ்ஸியைத் தேர்வு செய்த பார்சிலோனா நிர்வாகம், 2004-ல் 16-வது வயதில் அவருடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அதே வருடம் முதல் ஆட்டத்தை விளையாடினார். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்த அவா், பாா்சிலோனா அணி பெற்ற பல்வேறு வெற்றிகளில் முக்கியப் பங்கு வகித்தாா். ஸ்பெயினின் லாலீகா போட்டி விதிமுறைகளால் பாா்சிலோனா மற்றும் மெஸ்ஸி இடையே பல்வேறு நிதிச்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவரால் அந்த அணியில் தொடா்ந்து ஆட முடியாத நிலை உருவானது. அடுத்த சீசனுக்கு பாா்சிலோனா அணியில் ஆடப் போவதில்லை என மெஸ்ஸி அறிவித்தார். மெஸ்ஸி இனிமேல் பாா்சிலோனா அணியில் ஆட மாட்டாா் என பாா்சிலோனா அணி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாா்சிலோனா அணிக்காக 682 கோல்களை அடித்துள்ளாா். 16 சீசன்களில் 36 கிளப் கோப்பைகளை வென்று தந்துள்ளார். 

இந்நிலையில்  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் (பி.எஸ்.ஜி.) இணைய முடிவெடுத்துள்ளார் மெஸ்ஸி. இரண்டு வருட ஒப்பந்தத்தில் அந்த அணியில் விளையாடவுள்ளார். இதற்காக இன்று பாரிஸ் சென்றுள்ளார் மெஸ்ஸி. நெய்மருடன் இணைந்து மெஸ்ஸி மீண்டும் விளையாடவுள்ளதால் இந்தக் கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இருவரும் இதற்கு முன்பு பார்சிலோனா கிளப்பில் இணைந்து விளையாடி பல கோப்பைகளை வென்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com