இங்கிலாந்து அணியில் மாற்றம்: லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி கேப்டன் ஜோ ரூட்

நல்ல வாய்ப்பு. கவனம் ஈர்க்க அவர் விரும்புவார்.
இங்கிலாந்து அணியில் மாற்றம்: லார்ட்ஸ் டெஸ்ட் பற்றி கேப்டன் ஜோ ரூட்

முதல் டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏற்படும் என கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழன் முதல் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் பற்றி ஜோ ரூட் கூறியதாவது:

இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மொயீன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலியால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்துள்ளோம். ரன்கள் எடுத்துள்ளார், விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பந்துவீச்சினால் எங்களுக்கு வெற்றியையும் அளித்துள்ளார். அற்புதமான கிரிக்கெட் வீரர். டெஸ்ட் அணியில் அவர் மீண்டும் இடம்பெற்றது நல்ல விஷயம். சென்னை டெஸ்டில் நன்கு விளையாடினார். நல்ல வாய்ப்பு. கவனம் ஈர்க்க அவர் விரும்புவார். இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ், வோக்ஸ் இருந்ததால் இதற்கு முன்பு அணியில் மொயீன் அலி இடம்பெறவில்லை என்றார். 

கடந்த 23 மாதங்களில் ஒரு முதல்தர ஆட்டங்களில் மட்டுமே மொயீன்  அலி விளையாடியுள்ளார். எனினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொயீன்  அலி விளையாடினார். அந்த ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளார் மொயீன் அலி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com