அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச ஸ்கோர்: இது ரோஹித் கதை

​இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார்.
அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச ஸ்கோர்: இது ரோஹித் கதை


இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 83 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, அந்நிய மண்ணில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்த முறையும் இந்தியாவுக்குப் பிரமாதமான தொடக்கத்தைத் தந்தனர். ராகுல் நிதானம் காட்ட, ரோஹித் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தி வந்தார். இதன்மூலம், இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது.

ரோஹித் சர்மாவே ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தியதால், முதல் 100 ரன்களில் அவர் மட்டுமே 75 ரன்களை எடுத்திருந்தார். தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 80 ரன்களைக் கடந்து சதத்தை நோக்கி விளையாடி வந்தார். ஆனால், 83 ரன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 2015-இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கொழும்பில் 79 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நிய மண்ணில் அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் 2014-இல் 72 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், இவை அனைத்தும் நடுவரிசையில் களமிறங்கி அடித்தது.

இந்த நிலையில், அந்நிய மண்ணில் புதிய அதிகபட்ச ஸ்கோரை 6 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்துள்ளார் ரோஹித் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com