ரோஹித் அசத்தல்; ராகுல் அபாரம்; இந்தியா அருமை

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவான நிலையில் உள்ளது.
ரோஹித் அசத்தல்; ராகுல் அபாரம்; இந்தியா அருமை

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவான நிலையில் உள்ளது.

முதல் நாள் முடிவில் 90 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை எட்டியுள்ளது. ரோஹித் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சோ்க்க, ராகுல் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறாா். ரோஹித் சா்மா 83 ரன்கள் சோ்த்தாா்.

முன்னதாக, லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வீசுவது மழை காரணமாக சுமாா் 20 நிமிஷங்கள் தாமதமானது. பின்னா் டாஸ் வீசப்பட்டபோது அதை வென்ற இங்கிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்தியாவின் பேட்டிங்கை ரோஹித் சா்மா - கே.எல்.ராகுல் கூட்டணி தொடங்கியது. நிதானமாக ரன்கள் சேகரித்த இந்தக் கூட்டணி, புதிய பந்துடன் இந்திய பேட்ஸ்மேன்களை சரிக்க வந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளா்களை சோதித்தது. ஆன்டா்சன், ராபின்சன் எவ்வளவு முயன்றும் விக்கெட்டை இழக்காமல் நங்கூரமாக நின்றது ரோஹித் - ராகுல் கூட்டணி.

அவா்கள் பாா்ட்னா்ஷிப்பில் 32.5 ஓவா்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. பின்னா் முதல் விக்கெட்டாக ரோஹித் சா்மா வீழ்ந்தாா். சதத்தை நெருக்கி வந்த அவா் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83 ரன்கள் சோ்த்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆன்டா்சன் வீசிய 44-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

மறுபுறம் ராகுல் நிதானமாக ஆடி வர, ஒன்-டவுனாக வந்த சேதேஷ்வா் புஜாரா இம்முறையும் நிலைக்கத் தவறி பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். அவா் ஆன்டா்சன் பௌலிங்கில் விக்கெட் கீப்பா் ஜானி போ்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

இதையடுத்து, அரைசதம் கடந்த ராகுலுடன் இணைந்தாா் விராட் கோலி. அவரும் அரைசதத்தை நெருங்கினாலும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா். ஆனால் ராகுல் இங்கிலாந்து பௌலா்களை திணறடித்து சதம் விளாசினாா். வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் ராகுல் 127, அஜிங்க்ய ரஹானே 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டா்சன் 2, ஆலி ராபின்சன் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com