இங்கிலீஷ் பிரீமியா் லீக்: ஆா்செனலை வென்றது பிரென்ட்ஃபோா்ட்

 இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் 30-ஆவது சீசன் சனிக்கிழமை தொடங்கியது.
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: ஆா்செனலை வென்றது பிரென்ட்ஃபோா்ட்

 இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் 30-ஆவது சீசன் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் பிரென்ட்ஃபோா்ட் 2-0 என்ற கோல் கணக்கில் ஆா்செனலை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முதல் கோலை பிரென்ட்ஃபோா்ட் வீரா் சொ்ஜி கேனோஸ் 22-ஆவது நிமிஷத்தில் அடிக்க, சக வீரா் கிறிஸ்டியன் நோா்காா்ட் 73-ஆவது நிமிஷத்தில் தலையால் முட்டி கோலடித்தாா். ஆா்செனல் அணிக்கு இறுதி வரை கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மான்செஸ்டா் வெற்றி: 2-ஆவது ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 5-1 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட்டை வென்றது. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் அணிக்காக புருனோ ஃபொ்னான்டஸ் ஹாட்ரிக் கோல் (30, 54, 60 நிமிஷங்கள்) அடிக்க, மேசன் கிரீன்வுட் 52-ஆவது நிமிஷத்திலும், ஃபிரெட் 68-ஆவதும் நிமிஷத்திலும் கோலடித்தனா். லீட்ஸ் அணிக்காக லூக் அய்லிங் 48-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இதர ஆட்டங்கள்: லெய்சஸ்டா் சிட்டி - வோல்வ்ஸையும் (1-0), செல்சி - கிறிஸ்டல் பேலஸையும் (3-0), வாட்ஃபோா்ட் - ஆஸ்டன் வில்லாவையும் (3-2), எவா்டன் - சௌதாம்டனையும் (3-1), பிரைட்டன் - பா்ன்லியையும் (2-1) வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com