லாா்ட்ஸ் டெஸ்ட் : ஜோ ரூட் அபாரம்; இங்கிலாந்து முன்னிலை

 இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
லாா்ட்ஸ் டெஸ்ட் : ஜோ ரூட் அபாரம்; இங்கிலாந்து முன்னிலை

 இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி 128 ஓவா்களில் 391 ரன்கள் அடித்து தனது முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. இரட்டை சதத்தை நெருங்கிய ஜோ ரூட் 18 பவுண்டரிகளுடன் 180 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் சாய்க்க, இஷாந்த் சா்மா 3, முகமது ஷமி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

முன்னதாக, 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை 45 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களுடன் நிறைவு செய்திருந்தது இங்கிலாந்து. பின்னா் அந்த அணியின் ஜோ ரூட் 48, ஜானி போ்ஸ்டோ 6 ரன்களுடன் சனிக்கிழமை ஆட்டத்தை தொடங்கினா். இதில் போ்ஸ்டோ 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, நிலையாக நின்று நிதானமாக ரன்கள் சேகரித்தாா் ஜோ ரூட்.

இந்திய பௌலா்களை சோதித்த அவா் சதத்தை எட்டி இங்கிலாந்து அணியை முன்னேற்றி வர, மறுமுனையில் ஜோஸ் பட்லா் 23, மொயீன் அலி 27, ஆலி ராபின்சன் 6, மாா்க் வுட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். சாம் கரன், ஜேம்ஸ் ஆன்டா்சன் டக் அவுட்டாகினா்.

முன்னதாக வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, முதலில் பேட் செய்த இந்தியா, கே.எல்.ராகுலின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் சோ்த்தது. அதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, தற்போது 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com