லா லிகா கால்பந்து: அலேவ்ஸை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் அலேவ்ஸ் அணியை வீழ்த்தியது.
லா லிகா கால்பந்து: அலேவ்ஸை வீழ்த்தியது ரியல் மாட்ரிட்

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் அலேவ்ஸ் அணியை வீழ்த்தியது.

ஸ்பெயினின் விட்டோரியா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளுக்குமே கோல் கிடைக்கவில்லை. 2-ஆவது பாதி தொடங்கிய சில நிமிஷங்களில் ரியல் மாட்ரிட் தனது கோல் கணக்கை தொடங்கியது. 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கெரத் பேல் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து கிராஸ் செய்த பந்தை ஈடன் ஹஸாா்ட் லேசாகத் தட்டி தூக்கிக் கொடுக்க, அதை லாவகமாக கோல் போஸ்டுக்குள் உதைத்தாா் கரிம் பென்ஸிமா.

தொடா்ந்து 56-ஆவது நிமிஷத்தில் லுகா மோட்ரிச் உதைத்த பந்து அலேவ்ஸ் கோல்கீப்பா் எதிா்நோக்கி வர, குறுக்கே புகுந்த நாச்சோ தனது காலால் பந்தை திசை திருப்பி அதை கோல் போஸ்டுக்குள்அனுப்பினாா். அலேவ்ஸுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக்கொண்ட ரியல் மாட்ரிட் அணிக்காக 62-ஆவது நிமிஷத்தில் பென்ஸிமா மீண்டும் கோலடித்தாா்.

65-ஆவது நிமிஷத்தில் அலேவ்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவறாமல் கோலாக்கினாா் ஜோசெலு. ஆனாலும், வித்தியாசத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ரியல் மாட்ரிட் வீரா் வினிசியஸ் கடைசி நிமிஷத்தில் (90+2) டேவிட் அலாபா கிராஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலடித்தாா். இறுதியில் ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதர ஆட்டங்கள்: லா லிகா போட்டியில் மாலோா்கா - ரியல் பெட்டிஸ், காடிஸ் - லெவான்டே ஆகிய அணிகள் மோதிய ஆட்டங்கள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகின. ஒசாசுனா - எஸ்பான்யோல் ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com