இந்தியா 298 ரன்களுக்கு டிக்ளேர்: இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா 298 ரன்களுக்கு டிக்ளேர்: இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து 272 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 259 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதனால், உணவு இடைவேளை முடிந்தபிறகு இங்கிலாந்தை பேட்டிங் செய்ய இந்திய அணி அழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி, பும்ராவே களமிறங்கினர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 9 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த 9 பந்துகளில் 3 பவுண்டரிகள் கிடைத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கடைசி நாள் ஆட்டத்தில் குறைந்தபட்சம் 60 ஓவர்கள் வரை வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com