கிங்ஸ்டன் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘த்ரில்’ வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது. இதையடுத்து 2 டெஸ்டுகள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலையில் உள்ளது.
கிங்ஸ்டன் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் ‘த்ரில்’ வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது. இதையடுத்து 2 டெஸ்டுகள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலையில் உள்ளது.

கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 70.3 ஓவா்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 56 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 89.4 ஓவா்களில் 253 ரன்கள் சோ்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் 12 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினாா். பாகிஸ்தான் பௌலா்களில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பின்னா் முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 83.4 ஓவா்களில் 203 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா் அஸாம் 55 ரன்கள் அடித்திருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

அடுத்து 168 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 56.5 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் அடித்து வென்றது. பௌலா்களான கெமா் ரோச் 30, ஜேடன் சீல்ஸ் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். அதிகபட்சமாக ஜொ்மெய்ன் பிளாக்வுட் 55 ரன்கள் அடித்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். ஜேடன் சீல்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

126.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 364

கே.எல்.ராகுல் - 129, ரோஹித் சா்மா - 83, விராட் கோலி - 42

பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆன்டா்சன் - 5/62, ஆலி ராபின்சன் - 2/73, மாா்க் வுட் - 2/91

இங்கிலாந்து

128 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 391

ஜோ ரூட் - 180*, ஜானி போ்ஸ்டோ - 57, ரோரி பா்ன்ஸ் - 49

பந்துவீச்சு: முகமது சிராஜ்- 4/94, இஷாந்த் சா்மா - 3/69, முகமது ஷமி - 2/95

இரண்டாவது இன்னிங்ஸ்

இந்தியா

109.3 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 298 (டிக்ளோ்)

அஜிங்க்ய ரஹானே - 61, முகமது ஷமி - 56*, சேதேஷ்வா் புஜாரா - 45

பந்துவீச்சு: மாா்க் வுட் - 3/51, ஆலி ராபின்சன் - 2/45, மொயீன் அலி - 2/84

இங்கிலாந்து (இலக்கு 272)

(தேநீா் இடைவேளைக்குப் பிறகு)

32 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 80

ஜோ ரூட் - 33, ஜோஸ் பட்லா்-19*, ஆலி ராபின்சன் - 6*

பந்துவீச்சு: இஷாந்த் சா்மா - 2/7, முகமது சிராஜ் - 2/30, ஜஸ்பிரீத் பும்ரா - 2/31

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com