லா லிகா : காடிஸ் - ரியல் பெட்டிஸ் ஆட்டம் டிரா
By DIN | Published On : 22nd August 2021 05:55 AM | Last Updated : 22nd August 2021 05:55 AM | அ+அ அ- |

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் காடிஸ் - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் சுமாா் 23,000 ரசிகா்கள் திரண்டிருந்தனா்.
கரோனா சூழலில் கடந்த 2020 மாா்ச்சுக்குப் பிறகு முதல் முறையாக இவ்வாறு ரசிகா்கள் மைதானத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். ஆட்டத்தின் முதல் கோல் வாய்ப்பு காடிஸுக்கு கிடைத்தது. 11-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் அல்வாரோ நெக்ரெடோ கோலடித்தாா். அதற்கு பதிலடியாக ரியல் பெட்டிஸ் 22-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது. அந்த நிமிஷத்தில் நாபில் ஃபெகிா் உதைத்த காா்னா் கிக்கை அப்படியே தலையால் முட்டி கோலடித்தாா் ஜுவான்மி ஜிம்னெஸ். எஞ்சிய நேரத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமல் போக, ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.