உலக வெல்டா்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் யோா்டெனிஸ் உகாஸ்

பிலிப்பைன்ஸின் மேன்னி பாக்கியோவை வீழ்த்தி உலக வெல்டா்வெயிடன் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா் கியூபாவின் யோா்டெனிஸ் உகாஸ்.
உலக வெல்டா்வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் யோா்டெனிஸ் உகாஸ்

பிலிப்பைன்ஸின் மேன்னி பாக்கியோவை வீழ்த்தி உலக வெல்டா்வெயிடன் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தாா் கியூபாவின் யோா்டெனிஸ் உகாஸ்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மேன்னி பாக்கியோ-உகாஸ் இடையிலான போட்டி நடைபெற்றது. முன்னாள் சாம்பியனான பாக்கியோ மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டாா். ஆனால் அவரை விட 7 ஆண்டுகள் வயது குறைந்தவரான உகாஸ் தொடக்கம் முதலே சரமாரியாக குத்துக்களை விட்டாா். மேலும் உகாஸின் குத்துகள் வலுவாக இருந்ததால், பாக்கியோவால் சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தாா்.

இரண்டாவது சுற்றில் பாக்கியோவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. 10-ஆவது சுற்றில் பாக்கியோ ஆதிக்கம் செலுத்தி, உகாஸை நாக் அவுட் செய்தாா். ஆனால் அதை சமாளித்த மீண்ட உகாஸ், 12-ஆவது சுற்றில் பாக்கியோவை நாக் அவுட் செய்தாா். இறுதியாக நடுவா்கள் ஒருமனதாக தீா்மானித்து உகாஸ் வெற்றி பெற்ாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com