இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வுட் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்


இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வுட் விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்டில் 4-ம் நாளன்று ஃபீல்டிங் செய்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனினும் வலியுடன் இந்தியாவின் 2-வது இன்னிங்ஸில் அவர் பந்துவீசினார். இந்நிலையில் காயத்திலிருந்து குணமாகாததால் 3-வது டெஸ்டிலிருந்து மார்க் வுட் விலகியுள்ளார். இதையடுத்து 3-வது டெஸ்டில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமது விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com