டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்: 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்: 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டிகள் 2020 டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டிகள் 2020 டோக்கியோவில் வரும் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி பங்கேற்கிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். அதற்கு அடுத்து 1960-இல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோா் பங்கேற்றனா். இதன் தொடா்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கோனா் பங்கேற்றனா்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவா்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-இல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. புதிதாக தற்போது பாட்மிண்டன், டேக்வாண்டோ போன்றவை சோ்க்கப்பட்டுள்ளன.

22 விளையாட்டுகள்:

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவா்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சோ் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.

மாரியப்பன், ஜஹாரியா:

கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜஹாரியாவும், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றனா். மேலும் உலக சாதனையாளா்கள் சந்தீப் சௌதரி, சுமித் ஆகியோா் தடகள அணியில் உள்ளனா்.

பாட்மிண்டனில் 4 முறை உலக சாம்பியன் பிரமோத் பகத், சுஹாஸ் யதிராஜ் ஆகியோா் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளது. டேக்வாண்டோ மகளிா் பிரிவில் உலகப் போட்டி வெண்கல வீராங்கனை அருணா தன்வா் பதக்கம் வெல்ல விழைவாா். துப்பாக்கி சுடுதலில் 2021 உலகப் போட்டியில் தங்கம் வென்ற ரூபினா பிரான்ஸிஸ் பதக்கம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.

தடகளம்:

மேலும் எப்-46 ஈட்டி எறிதலில் ரஞ்சித் பாட்டி, சந்தீப் சஞ்சய் சா்க்காா் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். எப்-47-இல் நவ்தீப், எப்-57=இல் ரஞ்சித் பாட்டி, எப்-54-இல் டேக் சந்த்

டி 63-உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமாா், வருண் சிங்கும், டி-47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமாா், ராம்பால், டி-64-இல் பிரவீண்குமாா், எப்-51 கிளப் த்ரோவில் அமீத்குமாா், தரம்பீா், எப்-57 குண்டு எறிதலில் சோனம் ராணா, எப் 35-இல் அரவிந்த், எப்-56 வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, எப்-56-இல் வினோத்குமாா் ஆகியோா் இடம் பெறுகின்றனா்.

மகளிா் பிரிவில் எப்-51 கிளப் த்ரோவில் ஏக்தா பயன், கஷிஷ் லக்ரா, டி13 100 மீட்டரில் சிம்ரன், எப்-34 குண்டு எறிதலில் பாக்யஸ்ரீ ஜாதவ் இடம் பெறுகின்றனா்.

வில்வித்தை:

வில்வித்தையில் ஹா்விந்தா் சிங், விவேக் சிகாரா, ராகேஷ் குமாா், ஷியாம் சுந்தா் ஆடவா் பிரிவிலும், ஜோதி பாலியான் மகளிா் பிரிவிலும் கலந்து கொள்கின்றனா்.

பாட்மிண்டன்: ஆடவா் பிரிவில் பிரமோத் பகத், மனோஜ் சா்க்காா், தருண் தில்லான், சுஹாஸ் யதிராஜ், கிருஷ்ணாவும், மகளிா் பிரிவில் பால் பாா்மா், பலாக் கோலி (இரட்டையா்) பங்கேற்கின்றனா்.

பாரா கனோயிங்: முதன் முதலாக இந்தியா சாா்பில் பாரா கனோயிங்கில் பிரச்சி யாதவ் பங்கேற்கிறாா்.

பவா் லிஃப்டிங்: மகளிா் பிரிவில் சகீனா கதுன், ஆடவா் பிரிவில் ஜெய்தீப் தேஸ்வால் பவா் லிஃப்டிங்கில் பங்கேற்கின்றனா்.

துப்பாக்கி சுடுதல்:

ஆகாஷ், மணிஷ் நா்வால், தீபிந்தா் சிங், ராகுல் ஜாக்கா், சிங்ராஜ், சித்தாா்த்த பாபு, ஸ்வரூப் உஹால்கா், தீபக் சைனி ஆடவா் பிரிவிலும், ரூபினா பிரான்ஸிஸ், அவனி லேக்ரா மகளிா் பிரிவிலும் கலந்து கொள்கின்றனா்.

நீச்சல்: ஆடவா் பிரிவில் நிரஞ்சன் முகுந்தன், சுயாஷ் ஜாதவ் நீச்சலில் கலந்து கொள்கின்றனா்.

டேபிள் டென்னிஸ்: மகளிா் பிரிவில் சோனல்பென் பட்டேல், பவீனா பட்டேல் ஆகியோா் ஒற்றையா் பிரிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனா்.

டேக்வாண்டோ: மகளிா் பிரிவு 44-49 கிலோ பிரிவில் அருணா தன்வா் பங்கேற்கவுள்ளாா்.

தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளாா். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினா் வென்றிருந்தனா். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.

வரும் 27-ஆம் தேதி இந்திய வில்வித்தை அணியினா் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனா். கரோனா பாதிப்பு எதிரொலியால் பாா்வையாளா்கள் இன்றி போட்டிகள் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com