பாராட்டு விழாக்களால் போதிய பயிற்சி இல்லை: உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ரவி தாஹியா விலகல்

பாராட்டு விழாக்களை எப்படி மறுக்க முடியும்? எல்லாம் நம் மக்கள்...
பாராட்டு விழாக்களால் போதிய பயிற்சி இல்லை: உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து ரவி தாஹியா விலகல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் தாஹியா, நடப்பு உலக சாம்பியனான ரஷியாவின் (ஆர்.ஓ.சி.) ஜாவுர் உகுயேவிடம் தோற்றார். ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். 

நார்வேயில் அக்டோபர் 2-10 தேதிகளில் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி முகாமை இந்திய மல்யுத்த சம்மேளனம் அடுத்த வாரம் முதல் நடத்துகிறது. டோக்கியோவிலிருந்து திரும்பிய பிறகு தொடர்ச்சியாகப் பாராட்டு விழாக்களில் பங்கேற்று வருகிறார் ரவி தாஹியா. இதனால் போதிய பயிற்சி இல்லை என்கிற காரணத்துக்காக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என அவர் அறிவித்துள்ளார். 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 23 வயது தாஹியா கூறியதாவது:

போதிய பயிற்சியில்லாமல் களமிறங்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே பயிற்சி முகாமிலும் கலந்துகொள்ளவில்லை. அடுத்த மாதம் முதல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபடுவேன். பிறகு இந்தப் பருவத்தில் ஓரிரு போட்டிகளில் பங்கேற்பேன். பாராட்டு விழாக்களை எப்படி மறுக்க முடியும்? எல்லாம் நம் மக்கள். எனக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க விரும்புகிறார்கள். என்ன, தொடர்ச்சியான விழாக்களால் நான் சோர்வடைந்து விடுகிறேன். அவ்வளவுதான். கடந்த வாரம் என் வீட்டுக்கு வந்தேன். அங்கு இரண்டு மணி நேரம் தான் இருந்தேன். என் தந்தையை விமான நிலையத்தில் வைத்துப் பார்த்தேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com