ஆடுகளத்துக்கு வெளியே அனைவரும் சகோதரர்கள்: நீரஜ் சோப்ரா - பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பற்றி பஜ்ரங் புனியா

தாம். நாங்கள் ஆடுகளத்தில் தான் போட்டியாளர்களாக இருப்போம், ஆடுகளத்துக்கு வெளியே நாங்கள் அனைவரும் சகோதரர்கள்.
ஆடுகளத்துக்கு வெளியே அனைவரும் சகோதரர்கள்: நீரஜ் சோப்ரா - பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பற்றி பஜ்ரங் புனியா

ஆடுகளத்தில் தான் நாங்கள் போட்டியாளர்கள், ஆடுகளத்துக்கு வெளியே அனைவருமே சகோதரர்களே என நீரஜ் சோப்ரா - பாகிஸ்தான் வீரர் சர்ச்சை பற்றி இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கருத்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்

சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு நீரஜ் சோப்ரா பேட்டியளித்திருந்தார். அதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய ஈட்டியைத் தேடியதாகவும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார். பிறகு அவரிடமிருந்து அதை வாங்கி போட்டியில் கலந்துகொண்டதாகக் கூறினார். 

இதைவைத்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராகச் சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இந்திய வீரரின் கவனத்தைத் திசை திருப்ப முயன்றதாகவும் குற்றம் சாட்டினார்கள். சில ஊடகங்களில் பாகிஸ்தான் வீரரின் உள்நோக்கத்தைக் கேள்வி எழுப்பியும் செய்திகள் வெளியாகின. 

பாகிஸ்தான் வீரர் மீதான விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்து நீரஜ் சோப்ரா பதிவு எழுதியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: உங்களுடைய பிரசாரத்துக்காக என்னுடைய பேட்டியைப் பயன்படுத்த வேண்டாம். ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவே விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. என்னுடைய பேட்டியைக் கொண்டு சிலர் எதிர்வினையாற்றுவதைப் பார்த்து வேதனையடைந்துள்ளேன் என்றார். இதுதொடர்பான விடியோவில் அவர் கூறியதாவது: என்னுடைய பேட்டி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. எல்லோரும் அவரவருக்குரிய ஈட்டியை வைத்திருப்பார்கள். யாரும் அந்த ஈட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் விதிமுறை. என்னுடைய ஈட்டியைக் கொண்டு நதீம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

இந்த சர்ச்சை பற்றி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒரு பேட்டியில் கூறியதாவது:

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் பற்றிய நீரஜ் சோப்ராவின் பேட்டியை வைத்து சர்ச்சை உருவாக்கியுள்ளார்கள். எந்த தேசமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் என்றால் விளையாட்டு வீரர்கள் தாம். நாங்கள் ஆடுகளத்தில் தான் போட்டியாளர்களாக இருப்போம், ஆடுகளத்துக்கு வெளியே நாங்கள் அனைவரும் சகோதரர்கள். விளையாட்டு வன்மத்தைக் கற்றுத் தருவதில்லை. ஒற்றுமையாக இருக்கக் கற்றுத் தருகிறது. எங்களைப் பிரித்துப் பார்ப்பதில்லை என்றார். 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com