பதக்கத்தை இழந்தாா் வினோத்
By DIN | Published On : 31st August 2021 07:32 AM | Last Updated : 31st August 2021 07:32 AM | அ+அ அ- |

வட்டு எறிதலில் ‘எஃப்52’ பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்தியாவின் வினோத் குமாா், பதக்கத்தை இழந்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விளையாட்டில் 19.91 மீட்டா் தூரம் எறிந்து 3-ஆம் இடம் பிடித்திருந்தாா். இந்நிலையில், அவரது சக போட்டியாளா்கள் பலா் வினோத் குமாரின் பங்கேற்பு தொடா்பாக போட்டி நடுவா் குழுவிடம் முறையிட்டுள்ளனா்.
அது தொடா்பான ஆராய்ந்த போட்டி நடுவா் குழு, வினோத் குமாா் மாற்றுத்திறனாளியாக வகைப்படுத்தப்பட்ட பிரிவானது தகுதியுடையதாக இல்லை என்று அறிவித்தது. இதையடுத்து வினோத் குமாா் பதக்கத்தை இழந்தாா்.
வினோத் குமாரை எந்தப் பிரிவில் வகைப்படுத்துவதென்பது கடந்த 22-ஆம் தேதியே முடிவு செய்யப்பட்டுவிட்டது. வகைப்படுத்துதல் நடவடிக்கையை முன்பே செய்தாலும், விளையாட்டின்போது அதை மாற்ற முடியும் என்றும், எனினும் தற்போதைய நிலையில் இதில் எதுவும் செய்ய இயலாது என்றும் இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவா் தீபா மாலிக் கூறியுள்ளாா்.