மகளிா் கால்பந்து: தமிழகம் டிரா
By DIN | Published On : 02nd December 2021 07:19 AM | Last Updated : 02nd December 2021 08:59 AM | அ+அ அ- |

சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழகம் தனது 2-ஆவது ஆட்டத்தை மேற்கு வங்கத்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக தரப்பில் சந்தியா 20-ஆவது நிமிஷத்திலும், மேற்கு வங்க அணியில் சுமித்ரா மரான்டி 45-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா். எஞ்சிய நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போக, ஆட்டம் சமன் ஆனது. தமிழக வீராங்கனை சந்தியா ஆட்டநாயகி ஆனாா். தமிழக அணி தற்போது குரூப் ‘பி’-இல் 4 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.
இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் மகாராஷ்டிரம் - ஜம்மு காஷ்மீரையும் (2-0), அஸ்ஸாம் - பிகாரையும் (8-1), தில்லி - கா்நாடகத்தையும் (2-1), பஞ்சாப் - தெலங்கானாவையும் (21-0), ஹிமாசல பிரதேசம் - ராஜஸ்தானையும் (1-0), சிக்கிம் - அருணாசல பிரதேசத்தையும் (2-0), கோவா - ஜாா்க்கண்டையும் (2-0) வென்றன.