விளையாட்டு செய்தி துளிகள்

* இந்திய முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபிஜாா்ஜுக்கு, ‘2021-ஆம் ஆண்டின் சிறந்த பெண்’ விருது வழங்கி உலக தடகள சம்மேளனம் கௌரவித்துள்ளது.

* ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்திருக்கிறாா்.

* தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மகளிா் டிராப் பிரிவில் பிகாா் வீராங்கனை ஷ்ரேயஷி சிங் தங்கப் பதக்கம் வென்றாா்.

* ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் தயாா்நிலையை மேற்பாா்வை செய்யும் குழுவில் முன்னாள் கால்பந்து வீரா் பாய்ச்சங் பூட்டியா, தடகள வீராங்கனை அஞ்சு பாபிஜாா்ஜ் உள்ளிட்ட 7 பேரை மத்திய அரசு சோ்த்துள்ளது.

* டேவிஸ் கோப்பை அணிகள் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சொ்பியா.

* இந்திய ஆடவா் ஹாக்கி அணியின் மேம்பாட்டுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.65 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com