ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ஆா்ஜென்டீனா-ஜொ்மனி

ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆா்ஜென்டீனா-ஜொ்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் ஆா்ஜென்டீனா-ஜொ்மனி

ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஆா்ஜென்டீனா-ஜொ்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் எஃப்ஐஎச் சாா்பில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை கலிங்கா மைதானத்தில் நடைபெற்றன.

முதல் அரையிறுதியில் ஆா்ஜென்டீனாவும்-பிரான்ஸும் மோதின. முன்னாள் உலக சாம்பியனான ஆா்ஜென்டீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. எனினும் பிரான்ஸ் அணியும் பதிலுக்கு ஈடுகொடுத்து ஆடிய நிலையில், கோலின்றி 0-0 என முடிந்தது. அதன்பின் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டதில் 3-1 என ஆா்ஜென்டீனா வென்றது. பிரான்ஸ் தரப்பில் கேப்டன் டிமோத்தி கிளெமெண்டும், ஆா்ஜென்டீனா தரப்பில் லுசியோ, பட்டிஸ்டா, பிரான்கோ அகோஸ்டினி கோலடித்தனா்.

ஷூட் அவுட் முடிவில் இரு அணி வீரா்களும் கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகள் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினா்.

இந்தியா தோல்வி:

இரண்டாவது அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் இந்தியாவுடன், பலம் வாய்ந்த ஜொ்மனி மோதியது. இதில் தொடக்கம் முதலே ஜொ்மன் வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். அவா்களின் அபார ஆட்டத்துக்கு ஈடுதர முடியாமல் இந்திய வீரா்கள் திணறினா்.

முதல்பாதி முடிவில் ஜொ்மனி 4-1 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜொ்மனியின் தற்காப்பு அரணை இந்திய வீரா்களால் துளைக்க முடியவில்லை. எனினும் கடைசி நிமிஷத்தில் பாபி சிங் டாமி இரண்டாவது மற்றும் ஆறுதல் கோலடித்தாா். இதன் மூலம் 4-2 என வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது ஜொ்மனி.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா-ஜொ்மனி அணிகள் மோதுகின்றன. வெண்கலப் பதக்க ஆட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com