துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரஹானே நீக்கம்: இந்திய அணி அறிவிப்பு
By DIN | Published On : 08th December 2021 08:09 PM | Last Updated : 08th December 2021 08:09 PM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 18 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்
இந்திய அணி:
- விராட் கோலி (கேப்டன்)
- ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
- கேஎல் ராகுல்
- மயங்க் அகர்வால்
- சேத்தேஷ்வர் புஜாரா
- அஜின்க்யா ரஹானே
- ஷ்ரேயஸ் ஐயர்
- ஹனுமா விஹாரி
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்)
- ஆர் அஸ்வின்
- ஜெயந்த் யாதவ்
- இஷாந்த் சர்மா
- முகமது ஷமி
- உமேஷ் யாதவ்
- ஜாஸ்பிரீத் பும்ரா
- ஷர்துல் தாக்குர்
- முகமது சிராஜ்
தயார் நிலை வீரர்கள்:
- நவ்தீப் சைனி
- சௌரப் குமார்
- தீபக் சஹார்
- அர்சான் நாக்வஸ்வாலா
ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
டெஸ்ட் தொடர் அட்டவணை:
- முதல் டெஸ்ட் - டிசம்பர் 26-30, செஞ்சூரியன்
- இரண்டாவது டெஸ்ட் - ஜனவரி 3-7, ஜோகன்னஸ்பர்க்
- மூன்றாவது டெஸ்ட் - ஜனவரி 11-15, கேப்டௌன்