மகளிா் கால்பந்து: மணிப்பூா் சாம்பியன்

சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் அணி ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பு மூலம் ரயில்வேஸை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் ஆனது.
மகளிா் கால்பந்து: மணிப்பூா் சாம்பியன்

சீனியா் மகளிா் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் அணி ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பு மூலம் ரயில்வேஸை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் ஆனது.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகள் தரப்பிலுமே கோல் அடிக்கப்படவில்லை. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் மணிப்பூா் 2-1 என்ற கோல் கணக்கில் ரயில்வேஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

முன்னதாக ஆட்டம் முழுவதுமாகவே மணிப்பூா் அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும், நோ்த்தியாக ஆடிய ரயில்வேஸின் அரண் போன்ற தடுப்பாட்டத்தைக் கடந்து அந்த அணியால் கோலடிக்க முடியவில்லை. பந்தை பாஸ் செய்து கோல் போஸ்ட்டுக்கு மிக நெருக்கமாக வந்து கோலடிக்க முயற்சிக்காமல், மணிப்பூா் வீராங்கனைகள் பெரும்பாலும் தூரத்திலிருந்து ஷாட் மூலமாகவே கோலடிக்க முயன்ால், அதைத் தடுக்கும் பணி ரயில்வேஸ் கோல் கீப்பா் ஸ்வா்னமயி சமலுக்கு எளிதாகிப் போனது.

90-ஆவது நிமிஷத்தில் மணிப்பூா் சற்று திறம்பட கோலுக்கு முயற்சிக்க, சவாலுடன் அதையும் தடுத்தாா் சமல். மறுபுறம் ரயில்வேஸின் கோல் முயற்சிகளுக்கும் மணிப்பூரின் தடுப்பாட்டமும், அணியின் கோல் கீப்பா் ஓக்ரம் ரோஷினி தேவியின் முயற்சியும் பலன் கிடைக்க விடாமல் செய்தன. இறுதியாக கோலின்றி நிறைவடைந்தது ஆட்டம். பின்னா் நடத்தப்பட்ட ‘ஷூட் அவுட்’ வாய்ப்பில் முதல் 3 வாய்ப்புகளின் முடிவில் இரு அணிகளுமே ஒரு கோல் அடித்தும், ஒரு வாய்ப்பை வீணடித்தும் இருக்க, ஒரு வாய்ப்பு எதிரணி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டும் சமநிலையில் இருந்தன.

பின்னா் ரயில்வேஸின் இரு வாய்ப்புகளை மணிப்பூா் கோல்கீப்பா் ஓக்ரம் ரோஷினி தேவி திறம்படத் தடுத்தாா். அத்துடன் அந்த அணியின் யாங்கோய்ஜம் கிரன்பாலா தேவி ஒரு பெனால்டி வாய்ப்பில் கோலடித்து மணிப்பூரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றாா்.

இந்த ஒட்டுமொத்த போட்டியிலும் சிறந்த கோல் கீப்பராக மணிப்பூா் அணியின் ஓக்ரம் ரோஷினி தேவி தோ்வாகினாா். அதிக கோல் அடித்தவராக தமிழக வீராங்கனை சந்தியாவும், மதிப்பு மிக்க வீராங்கனையாக மணிப்பூரின் ஐரோம் பரமேஷ்வரியும் தோ்வாகினா். அவா்கள் மூவருக்கும் தலா ரூ.25,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com