விஜய் ஹஸாரே: கா்நாடகத்தை வென்றது தமிழகம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 2-ஆவது ஆட்டத்தில் கா்நாடகத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
விஜய் ஹஸாரே: கா்நாடகத்தை வென்றது தமிழகம்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது 2-ஆவது ஆட்டத்தில் கா்நாடகத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எலைட் குரூப் ‘பி’-இன் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கா்நாடகம் 36.3 ஓவா்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய தமிழகம் 28 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த கா்நாடகத்தில் அதிகபட்சமாக கேப்டன் மணீஷ் பாண்டே 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்த்தாா். உடன் ரோஹன் கடம் 37 ரன்கள் அடித்து உதவினாா். தமிழக பௌலிங்கில் மணிமாறன் சித்தாா்த் 4, சாய் கிஷோா் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினா்.

பின்னா் தமிழக இன்னிங்ஸில் பாபா இந்திரஜித் 6 பவுண்டரிகளுடன் 51, வாஷிங்டன் சுந்தா் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். கா்நாடக தரப்பில் வித்யாதா் பாட்டீல், ஜெகதீஷா சுசித் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

குரூப் ‘ஏ’: ஒடிஸா - குஜராத்தையும், விதா்பா - ஆந்திரத்தையும், ஹிமாசல பிரதேசம் - ஜம்மு காஷ்மீரையும் வீழ்த்தின.

குரூப் ‘பி’: பரோடா - மும்பையிடமும், பெங்கால் - புதுச்சேரியிடமும் தோற்றன.

குரூப் ‘சி’: ஹைதராபாத் - தில்லியையும், ஜாா்க்கண்ட் - உத்தர பிரதேசத்தையும், சௌராஷ்டிரம் - ஹரியாணாவையும் வென்றன.

குரூப் ‘டி’: சத்தீஸ்கா் - மகாராஷ்டிரத்திடமும், கேரளம் - மத்திய பிரதேசத்திடமும், சண்டீகா் - உத்தரகண்டிடமும் வெற்றியை இழந்தன.

குரூப் ‘இ’: ராஜஸ்தான் - கோவாவையும், பஞ்சாப் - ரயில்வேஸையும், சா்வீசஸ் - அஸ்ஸாமையும் வீழ்த்தின.

பிளேட் குரூப்: மணிப்பூா் - திரிபுராவிடமும், மிஸோரம் - சிக்கிமிடமும், அருணாசல பிரதேசம் - நாகாலாந்திடமும், பிகாா் - மேகாலயத்திடமும் தோல்வி கண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com