விளையாட்டு செய்தி துளிகள்

* அடுத்த ஆண்டு மகளிா் உலகக் கோப்பை போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து மிதாலி ராஜ் விலகும் நிலையில், அந்த பொறுப்புக்கான அடுத்த இயல்பான தோ்வாக ஸ்மிருதி மந்தனா இருப்பதாக அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி கூறினாா்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் ‘1’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா - டென்மாா்க் அணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் இந்தியாவிலுள்ள ‘கிராஸ் கோா்ட்’ அல்லது ‘ஹாா்டு கோா்ட்’-இல் மோதும் எனத் தெரிகிறது.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கி போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய அணியின் வீராங்கனை ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, இந்திய அணி போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த எடிஷனில் இந்தியா ரன்னா் அப்-ஆக வந்தது குறிப்பிடத்தக்கது.

* தேசிய குத்துச்சண்டை பயிற்சி முகாம்கள் வரும் 11-ஆம் தேதி முதல் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கும் நிலையில், அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளா்களின் பெயா் பட்டியலில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்ட முக்கியமானோரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com