236 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியா மீண்டும் ஆதிக்கம்

ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து 282 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
236 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு: ஆஸ்திரேலியா மீண்டும் ஆதிக்கம்


ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து 282 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆஷஸ் 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

டேவிட் மலான் 1 ரன்னுடனும், ஜோ ரூட் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3-ம் நாள் ஆட்டத்தில் இந்த இணை சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்டது. 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த நிலையில் இருவரும் அரைசதத்தைக் கடந்தனர்.

இந்த ஆட்டத்திலும் பெரிய பாட்னர்ஷிப்பாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது இணை பிரிந்தது. ரூட் 62 ரன்களுக்கு கேமரூன் க்ரீன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மலான் 80 ரன்களுக்கு மிட்செல் ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்தார்.

இதையடுத்து, ஆலி போப் 5 ரன்களுக்கும், ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால், இங்கிலாந்து மீண்டும் சரிவைச் சந்தித்தது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆனால், நாதன் லயான் 24 ரன்கள் எடுத்திருந்த வோக்ஸ் மற்றும் அடுத்து களமிறங்கிய ஆலி ராபின்சன் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

அடக்கி வாசித்த ஸ்டோக்ஸ் சேலான அதிரடி காட்டத் தொடங்கினார். எனினும், 34 ரன்கள் எடுத்திருந்தபோதே அவரை கிரீன் போல்டாக்கினார்.

கடைசி விக்கெட்டாக ஸ்டுவர்ட் பிராட் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

236 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், முதல் இன்னிங்ஸில் அந்த அணி 237 ரன்கள் பின்தங்கியிருந்தது. எனினும், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஃபாலோ ஆன் செய்ய அழைக்காமல் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் நல்ல தொடக்கத்தைத் தந்து விளையாடி வந்தனர். 3-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வரும் நேரத்தில் வார்னர் 13 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

எனினும், ஹாரிஸ் மற்றும் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய மைக்கேல் நீசர் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்து 282 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com