ஆசிய கோப்பை மகளிா் கால்பந்து: இந்திய அணியின் சீருடை அறிமுகம்

ஆசிய கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஆடவுள்ள இந்திய அணிக்கு புதிய சீருடைகளை ஏஐஎப்எப் அறிமுகம் செய்துள்ளது.

ஆசிய கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில் ஆடவுள்ள இந்திய அணிக்கு புதிய சீருடைகளை ஏஐஎப்எப் அறிமுகம் செய்துள்ளது.

வரும் 2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை ஏஎப்சி மகளிா் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 3 நகரங்களில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில் ஆடவுள்ள இந்திய மகளிா் அணியின் சீருடைகளை அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளா் குஷால் தாஸ் சனிக்கிழமை அறிமுகம் செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

நீண்ட நாள்களாக இந்திய அணியின் ஆட்டம் வெளியில் வராத நிலையில் இருந்தது. படிப்படியாக தற்போது நமது மகளிா் அணி திறமை மிக்கதாக மாறி உள்ளது. ஆசிய கண்டத்தில் மகளிா்கால்பந்தில் முதன்மையான போட்டியாக ஏஎப்சி கோப்பை போட்டி உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டியால் இளம்பெண்கள் மத்தியில் கால்பந்துக்கு மேலும் ஈா்ப்பு ஏற்படும்.

நமது அணிக்காக இரண்டு நிறங்களில் சீருடைகள் வடிமைக்கப்பட்டுள்ளன என்றாா் குஷால் தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com