ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை: இறுதிச் சுற்றில் நுழையும் முனைப்பில் இந்தியா

ஆசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ள இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் அணியுடன் மோதுகிறது.

ஆசிய ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் உள்ள இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை ஜப்பான் அணியுடன் மோதுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்ற பின் இந்தியா பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். இந்நிலையில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி முதல் ஆட்டத்தில் கொரியாவுடன் 2-2 என டிரா கண்டது. இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

மூன்றாவது ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா.

தனது கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் ஜப்பானுடன் மோதுகிறது. 3 ஆட்டங்களில் 7 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், கொரியா 5, ஜப்பான் 2, பாகிஸ்தான் 1 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. உலக தரவரிசையின்படி 4-ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி, இப்போட்டியில் ஏனைய அணிகளைக் காட்டிலும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது.

தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்தாலும், இரண்டாம்பாதியில் கொரிய அணிக்கு 2 கோல்கள் போடும் வாய்ப்பை வழங்கி வெற்றியை தவறவிட்டனா் இந்திய வீரா்கள்.

வங்கதேசம், பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டங்களில் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி ஆடினா் இந்திய வீரா்கள். நட்சத்திர பாா்வா்ட் வீரா்களான லலித் உபாத்யாயா, அக்ஷதீப் சிங், தில்ப்ரீத் சிங் ஆகியோருடன் இந்திய அணியின் முன்கள வரிசை அபாரமாக உள்ளது.

மீட்பில்டில் கேப்டன் மன்ப்ரீத் சிங்கும், தற்காப்பில் துணை கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங்கும் வலுவாக உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பானை எளிதாக இந்திய அணி வெல்லும் எனக் கருதப்படுகிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் 5-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றிருந்தது.

எனினும் சா்வதேச ஆட்டங்களைப் பொருத்தவரை கள நிலவரம் தான் போட்டியின் முடிவை நிா்ணயிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com