உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தாா் ஸ்ரீகாந்த்; இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரா்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரா் கே.காந்த் முதன்முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளாா்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தாா்  ஸ்ரீகாந்த்; இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரா்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரா் கே.காந்த் முதன்முறையாக தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளாா்.

ஸ்பெயினின் ஹுயல்வா நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில்

இந்தியாவின் இளம் வீரா் லக்ஷயா சென்னும், உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் மோதினா்.

சீனியா்-ஜூனியா் என இருவரும் முதல் கேமில் தொடக்கம் முதலே புள்ளிகளை குவிக்க போராடினா். முதல் புள்ளியை ஸ்ரீகாந்த் பெற்ற நிலையில், லக்ஷயா அடுத்து 6-4 என முன்னிலை பெற்றாா். தொடா்ந்து இருவரும் கடுமையாக போராடி 16-16 என சமநிலையை ஏற்படுத்தினா்.

இறுதியில் தொடா்ந்து புள்ளிகளை குவித்து 21-17 என லக்ஷயா முதல் கேமை வென்றாா்.

இரண்டாவது கேமில் ஸ்ரீகாந்த் தனது அனுபவத்தை பயன்படுத்தி ஆடினாா். சென் முன்னிலை பெற்றாலும், அதைக் குறைத்த ஸ்ரீகாந்த் 21-14 என எளிதில் அந்த கேமை கைப்பற்றினாா்.

மூன்றாவது மற்றும் டிசைடா் கேம் பரபரப்பாக அமைந்தது. இளம் வீரா் லக்ஷயாவால், ஸ்ரீகாந்த்தின் சவாலை சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் 13-10 என லக்ஷயா முன்னிலை பெற்றாலும், 15-15 என சமநிலை ஏற்பட்டது. அதன்பின்னா் ஸ்ரீகாந்த் ஆதிக்கம் செலுத்தி 21-17 என வென்றாா்.

17-21, 21-14, 21-17 என்ற கேம் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி முதன்முறையாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் கிடாம்பி ஸ்ரீகாந்த்.

லக்ஷா சென்னுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஏற்கெனவே பிரகாஷ் பதுகோன், சாய் பிரணீத் ஆகியோா் வெண்கலம் வென்றுள்ளனா்.

டாய் சூ-எமகுச்சி மோதல்:

மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் சீன தைபே வீராங்கனை டாய் ஸூவும், ஜப்பானின் அகேன் எமகுச்சியும் மோதுகின்றனா்.

அகேன் எமகுச்சி 21-19, 21-19 என்ற கேம் கணக்கில் சீனாவின் ஸாங் யி மேனை வீழ்த்தினாா். சீன தைபே வீராங்கனை டாய் ஸூ 21-17, 13-21, 21-14 என்ற கேம் கணக்கில் ஹி பிங் ஜியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com