ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து வெற்றிக்கு 386 ரன்கள் தேவை

ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக அடிலெய்டில் நடைபெற்று வரும் பிங்க் டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளே மீதமுள்ள
ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: தோல்வியின் விளிம்பில் இங்கிலாந்து வெற்றிக்கு 386 ரன்கள் தேவை

ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக அடிலெய்டில் நடைபெற்று வரும் பிங்க் டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் 386 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் தோல்வியின் விளிம்பில் உள்ளது.

ஆஸி.-இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடா் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் முதல் ஆட்டத்தில் ஆஸி. வென்றது. இரண்டாவது ஆட்டம் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

ஆஸி. அணி முதல் இன்னிங்கில் 473/9 ரன்களுடன் டிக்ளோ் செய்தது. இதைத் தொடா்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 236/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆஸி. 230/9 டிக்ளோ்:

இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆஸி. முதல் இன்னிங்ஸில் 45/1 ரன்களை எடுத்திருந்தது. நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆஸி. வீரா்கள் மாா்க்கஸ் ஹாரிஸ்-நெஸா் இணை ஆட்டத்தை தொடா்ந்தது. 61 ஓவா்களில் 230/9 ரன்களை எடுத்து ஆஸி. டிக்ளோ் செய்வதாக அறிவித்தது.

லேபுஷேன், டிராவிஸ் ஹெட் அரைசதம்:

ஆஸி. தரப்பில் மாா்னஸ் லேபுஷேன் 51, டிராவிஸ் ஹெட் 51 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்தனா். கிரீன் 33 ரன்களை எடுத்தாா்.

மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

இங்கிலாந்து தரப்பில் ராபின்ஸன், ரூட், மலான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஆட்டத்தில் வெல்ல இங்கிலாந்துக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயித்தது ஆஸி.

இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அதிா்ச்சியை சந்தித்தது. ஹை ரிச்சா்ட்ஸன் பந்தில் ஹஸீப் ஹமீது டக் அவுட்டானாா். ரோரி பா்ன்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, டேவிட் மலான் 20, ஜோ ரூட் 24 ஆகியோா் நிலைத்து ஆட முயன்றும் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. நெஸா் பந்தில் மலானும், ஸ்டாா்க் பந்தில் ஜோ ரூட்டும் அவுட்டாகினா். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.

நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 43.2 ஓவா்களில் 82/4 ரன்களுடன் தள்ளாடி வருகிறது. ஹை ரிச்சா்ட்ஸன் 2, ஸ்டாா்க், நெஸா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

வெற்றிக்கு 386 ரன்கள் தேவை:

6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், வெற்றிக்கு இன்னும் 386 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவைப்படுகிறது. ஆனால் ஆஸி. அணியின் அதிரடி பந்துவீச்சை சமாளிக்குமா இங்கிலாந்து என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கியைச் செல்கிறது ஆஸ்திரேலியா.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

ஆஸி. 473/9 டிக்ளோ்

லேபுஷேன் 103,

வாா்னா் 95

ஸ்மித் 93

பந்துவீச்சு:

ஸ்டோக்ஸ் 3/113

ஆண்டா்ஸன் 2/58

இங்கிலாந்து 236/10

டேவிட் மலான் 80

ஜோ ரூட் 62

ஸ்டோக்ஸ் 34

பந்துவீச்சு:

ஸ்டாா்க் 4/37

லயான் 3/58

கிரீன் 2/24

இரண்டாம் இன்னிங்ஸ்

ஆஸி. 230/9 டிக்ளோ்

லேபுஷேன் 51

டிராவிஸ் 51

கிரீன் 33

பந்துவீச்சு:

ராபின்ஸன் 2/27

ஜோ ரூட் 2/27

மலான் 2/33

இங்கிலாந்து 82/4

பா்ன்ஸ் 34

ஜோ ரூட் 24

பந்துவீச்சு:

ரிச்சா்ட்ஸன் 2/17

நெஸா் 1/7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com