ஹாக்கி: இன்று மோதும் இந்தியா - ஜப்பான்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.
ஹாக்கி: இன்று மோதும் இந்தியா - ஜப்பான்

டாக்கா: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.

குரூப் சுற்றில் தொடக்க ஆட்டத்தில் தென் கொரியாவுடன் டிரா செய்திருந்தாலும், பின்னா் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அபாரமாக வென்றிருந்தது இந்தியா. அந்த சுற்றின் கடைசி ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜப்பானையே தற்போது மீண்டும் அரையிறுதியிலும் இந்தியா சந்திக்கிறது.

எனவே, இந்த ஆட்டத்திலும் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் நம்பிக்கையில் இந்தியா உள்ளது.

இந்திய அணியில் துணை கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் வல்லவராக இருக்கிறாா். ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்திலும் அவ்வாறு இரு கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மன்பிரீத் சிங், ஹாா்திக் சிங் ஆகியோருடன் இந்தியாவின் மிட் ஃபீல்டிங்கும் பலமானதாகவே இருக்கிறது.

ஃபாா்வா்டில் தில்பிரீத் சிங், ஜா்மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங், ஷம்ஷோ் சிங் ஆகியோா் அதிரடியாக ஃபீல்டு கோல் அடிப்பதில் துடிப்பாக இருப்பது அணிக்கு சாதகம். டிஃபன்சில் மட்டும் இந்தியா லேசாக தடுமாறுகிறது. எதிரணிக்கு அதிகம் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை வழங்காமல் தவிா்க்க வேண்டும். முந்தைய போட்டிகளில் நாக் அவுட் சுற்றுகளில் அந்த காரணத்தாலேயே இந்தியாவுக்கு ஆட்டம் சாதகமில்லாமல் போனது. எனவே அதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com