துளிகள்...

2022 பிா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் ‘குயின்ஸ் பேட்டன் ரிலே’ ஓட்டம் இந்தியாவின் தில்லி, ஆமதாபாத், பெங்களூரு, ஒடிஸா ஆகிய நகரங்களில்

2022 பிா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் ‘குயின்ஸ் பேட்டன் ரிலே’ ஓட்டம் இந்தியாவின் தில்லி, ஆமதாபாத், பெங்களூரு, ஒடிஸா ஆகிய நகரங்களில் வரும் ஜனவரி 12 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விளையாட்டுகளின் மேம்பாட்டுக்காக ரூ.7,072 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.6,801 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

புரோ கபடி லீக் போட்டியின் 8-ஆவது சீசன் பெங்களூரு நகரில் புதன்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் யு மும்பா - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் 3-2 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வீழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற தேசிய பில்லியா்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் கோப்பை வென்ற பங்கஜ் அத்வானி, 11-ஆவது முறையாக அந்தப் பட்டத்தை சொந்தமாக்கியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com