தேசிய ஜூனியர் ஹாக்கி: இன்று காலிறுதி ஆட்டங்கள்

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் 7-ஆவது நாளான புதன்கிழமை (டிச. 22) காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
தேசிய ஜூனியர் ஹாக்கி: இன்று காலிறுதி ஆட்டங்கள்

கோவில்பட்டி: தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் 7-ஆவது நாளான புதன்கிழமை (டிச. 22) காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில், இம்மாதம் 16-ஆம் தேதி முதல் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் உள்பட 27 அணிகள் பங்கேற்றுள்ளன. 

போட்டியின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அந்தமான் நிகோபார் அணி பங்கேற்க இயலாததால், அதன் எதிரணியான தமிழக அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் 3 - 1 என்ற கோல் கணக்கில் ஹிமாசல பிரதேச அணியை தோற்கடித்தது. 

3-ஆவது ஆட்டத்தில் தில்லி 14 - 1 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தியது. மணிப்பூர் - புதுச்சேரி அணிகள் மோதிய 4-ஆவது ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 5-ஆவது ஆட்டத்தில் ஜார்க்கண்ட் 11 - 1 என்ற கோல் கணக்கில் கோவா அணியை தோற்கடித்தது. 6-ஆவது ஆட்டத்தில் பிகார் 6 - 1 என்ற கோல் கணக்கில் அஸ்ஸôம் அணியை வீழ்த்தியது. 

இத்துடன் போட்டியின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன. அடுத்ததாக காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

இன்றைய ஆட்டம்: 7-ஆவது நாளான புதன்கிழமை (டிச. 22) நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் காலை 8 மணிக்கு சண்டீகர் - பஞ்சாப்  அணிகளும், 10 மணிக்கு ஹரியாணா - தமிழக அணிகளும் மோதுகின்றன.

மாலை 5.30 மணிக்கு உத்தர பிரதேசம் - தில்லி அணிகளும், இரவு 7.30 மணிக்கு ஒடிஸô - பிகார் அணிகளும் களம் காண்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com