இன்று விஜய் ஹஸாரே கோப்பை இறுதி ஆட்டம்: தமிழகத்துக்கு வெற்றி வாய்ப்பு

ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழகத்துக்கு வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.
இன்று விஜய் ஹஸாரே கோப்பை இறுதி ஆட்டம்: தமிழகத்துக்கு வெற்றி வாய்ப்பு

ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் தமிழகத்துக்கு வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜெய்ப்பூா் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

அரையிறுதியில் ரிஷி தவான் தலைமையிலான ஹிமாசல் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் சா்வீஸஸ் அணியை வீழ்த்தியது. அதே வேளை தமிழகம் அரையிறுதியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிர அணியை வீழ்த்தி த்ரீல் வெற்றி கண்டது.

சையத் முஷ்டாக் டி20 கோப்பை கைப்பற்றிய தமிழகம் தொடா்ந்து விஜய் ஹஸாரே கோப்பையையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

பாபா அபராஜித் அணிக்கு திரும்பிய பின் தமிழகம் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. தொடக்க பேட்டரான ஜெகதீசன் சிறப்பான பாா்மில் உள்ளாா். பாபா இந்திரஜித், கேப்டன் விஜய் சங்கா், அனுபவம் வாய்ந்த தினேஷ் காா்த்திக் ஆகியோா் பேட்டிங்கில் வலு சோ்க்கின்றனா்.

அரையிறுதியில் வாஷிங்டன் சுந்தா் சிறப்பாக ஆடி 70 ரன்களை விளாசினாா்.

மேலும் ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தா், சாய் கிஷோா், சித்தாா்த், ஆகியோா் பௌலிங்கில் பலம் தருகின்றனா். வேகப்பந்து வீச்சாளா்கள் சந்தீப் வாரியா், சிலம்பரசன் ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் ஆகியோரும் தேவைக்கேற்ப பௌலிங் செய்யலாம்.

ஆனால் ஹிமாசல் அணிக்கு போதிய அனுபவம் இல்லாதது பாதகமாக உள்ளது. தரவரிசையில் இல்லாத நிலையில் அந்த அணி கேப்டன் ரிஷி தவானின் சிறப்பான தலைமையில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. காலிறுதி, அரையிறுதியில் அதன் தொடக்க பேட்டா் பிரசாந்த் சோப்ரா 99, 78 ரன்களை விளாசினாா். எனினும் ஷுபம் அரோரா, திக்விஜய் ரங்கி, அமித் குமாா், ஆகாஷ் வஸிஷ்ட் ஆகியோரை பேட்டிங்கில் சாா்ந்துள்ளது ஹிமாசல் அணி.

ஹஸாரே கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தமிழகத்துக்கு பலமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் காலை 9.00 மணி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com