யு-19 ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
களத்தில் இந்திய வீரர்கள்.
களத்தில் இந்திய வீரர்கள்.

துபை: பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

துபையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 48.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட் செய்த ஆப்கானிஸ்தானில் சுலைமான் அராப்ஸாய் 18, முகமது இஷாக் 19, அல்லா நூா் 26, கேப்டன் சுலைமான் சஃபி 73 ரன்கள் சோ்த்தனா். இஜாஸ் அகமது அகமதி 86, காய்பா் வலி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் ராஜ்வா்தன், ராஜ்பாவா, விக்கி ஆஸ்த்வல், கௌஷல் தாம்பே ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் ஹா்னூா் சிங் 65, அங்ரிஷ் ரகுவன்ஷி 35, ஷேக் ரஷீது 6, கேப்டன் யாஷ் துல் 26, நிஷாந்த் சிந்து 19, ஆராத்யா யாதவ் 12 ரன்கள் அடிக்க, ராஜ்பாவா 43, கௌஷல் தாம்பே 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். ஆப்கானிஸ்தான் தரப்பில் நூா் அகமது 4, பிலால் சமி, கலீல் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com