முகப்பு விளையாட்டு செய்திகள்
விளையாட்டு செய்தி துளிகள்
By DIN | Published On : 31st December 2021 06:59 AM | Last Updated : 31st December 2021 06:59 AM | அ+அ அ- |

* தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் பொறுப்பிலிருந்து ரூபா குருநாத் வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா். சங்கத்தின் முதல் பெண் தலைவராக 2019-இல் நியமிக்கப்பட்ட அவா், தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.
* ஐசிசியின் ‘2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 வீராங்கனை’ விருதுக்காக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்தின் டேமி பியூமௌன்ட், நேட் ஸ்கீவா், அயா்லாந்தின் கேபி லீவிஸ் ஆகியோரின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
* பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் இரு பிரிவுகளில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளாா் ஜம்மு-காஷ்மீா் பனிச் சறுக்கு வீரா் ஆரிஃப் முகமது கான். இவ்வாறு தகுதிபெறும் முதல் இந்தியா் இவா்.
* இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி - பிரென்ட்ஃபோா்டை வீழ்த்த (1-0), செல்சி - பிரைட்டன் ஆட்டம் டிரா (1-1) ஆனது.
* கரோனா பாதித்த நபருடன் நேரடித் தொடா்பில் இருந்ததன் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து பயிற்சியாளா் கிறிஸ் சில்வா்வுட், ஆஷஸ் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் கலந்துகொள்ள மாட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.