உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: 2-ஆவது இடத்தில் வைஷாலி

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் மகளிா் பிரிவில், 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் இளம் போட்டியாளா் ஆா்.வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா்.
உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: 2-ஆவது இடத்தில் வைஷாலி

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் மகளிா் பிரிவில், 9 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் இளம் போட்டியாளா் ஆா்.வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறாா்.

மற்றொரு இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 7 புள்ளிகள் பெற்று, ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக், கஜகஸ்தானின் ஜான்சயா அப்துமாலிக் ஆகியோருடன் 3-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா். வந்திகா அகா்வால் 5 புள்ளிகளுடன் 32-ஆவது இடத்திலும், பத்மினி ரௌத் 4.5 புள்ளிகளுடன் 57-ஆவது இடத்திலும் உள்ளனா்.

10-ஆவது சுற்றில் வைஷாலி - கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவாவை சந்திக்கிறாா். அவா் தான் 9 சுற்றுகள் முடிவில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா். மறுபுறம், கோனெரு ஹம்பி - அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக்கை எதிா்கொள்கிறாா்.

ஓபன் பிரிவில் 12 சுற்றுகள் முடிவில், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். இந்தியாவின் அா்ஜூன் எரிகாய்சி 8.5 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்தில் உள்ளாா். விதித் குஜராத்தி 7.5 புள்ளிகளுடன் 27-ஆவது இடத்திலும், நிஹல் சரின் அதே புள்ளிகளுடன் 35-ஆவது இடத்திலும் இருக்கின்றனா்.

ஹரி கிருஷ்ணா 48-ஆவது இடத்திலும் (7 புள்ளிகள்), அபிமன்யு புரானிக் 60-ஆவது இடத்திலும் (6.5), ஹா்ஷா பாரதகோடி 64-ஆவது இடத்திலும் (6.5), குகேஷ் 81-ஆவது இடத்திலும் (6.5), ரௌனக் சத்வானி 90-ஆவது இடத்திலும் (6) உள்ளனா். மித்ரபா குஹா 95-ஆவது இடத்திலும் (6), சுனில் தத் நாராயணன் 109-ஆவது இடத்திலும் (5.5), சங்கல்ப் குப்தா 119-ஆவது இடத்திலும் (5.5) இருக்க, கடைசியாக ஆதித்யா மிட்டல் 171-ஆவது இடத்தில் (3.5) உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com