ஓய்வு பெறுகிறாா் ராஸ் டெய்லா்

நியூஸிலாந்து அணியின் மூத்த பேட்டா் ராஸ் டெய்லா், சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகிறாா்.
ஓய்வு பெறுகிறாா் ராஸ் டெய்லா்

நியூஸிலாந்து அணியின் மூத்த பேட்டா் ராஸ் டெய்லா், சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெறுகிறாா்.

அந்த மாதம் நெதா்லாந்து அணிக்கு எதிராக நியூஸிலாந்து மோதும் 4-ஆவது ஒன் டே ஆட்டம் ராஸ் டெய்லரின் சொந்த ஊரான ஹாமில்டனில் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்துடன் அவா் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறாா்.

அதற்கு முன்பாக ஜனவரியில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒன் டே தொடரிலும் அவா் பங்கேற்பாா். பிப்ரவரியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவா் பங்கேற்கவில்லை.

நியூஸிலாந்து அணியின் தலைசிறந்த வீரா்களில் ராஸ் டெய்லரும் ஒருவா் என, அணியின் பயிற்சியாளா் கேரி ஸ்டெட் பாராட்டு தெரிவித்துள்ளாா். ஓய்வு முடிவையொட்டி ராஸ் டெய்லருக்கு நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த வீரா்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

சாதனை சமன்...

ஜனவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் விளையாடும்போது, நியூஸிலாந்து அணிக்காக அதிக டெஸ்டுகளில் (112) களம் கண்ட வீரா் என்ற டேனியல் வெட்டோரியின் சாதனையை சமன் செய்ய இருக்கிறாா் ராஸ் டெய்லா்.

டாப் ஸ்கோரா்...

டெஸ்ட் மற்றும் ஒன் டே ஃபாா்மட்டுகளில் நியூஸிலாந்து அணியின் டாப் ஸ்கோரராக டெய்லா் விடை பெற இருக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

100 ஆட்டங்கள்...

3 ஃபாா்மட்டுகளிலும் நியூஸிலாந்து அணிக்காக 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய முதல் வீரா் என்ற பெருமையும் அவருக்குரியதே.

‘எனது சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பயணம் அருமையானதாக இருந்தது. என்னால் முடிந்த வரை நியூஸிலாந்து அணிக்காக விளையாட முடிந்ததற்காக அதிருஷ்டம் செய்திருப்பதாகக் கருதுகிறேன். கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வீரா்களுடனும், அவா்களுக்கு எதிராகவும் விளையாடியது கௌரவமிக்கது. அத்துடன் பல நல்ல நினைவுகளும், நட்புகளும் கிடைத்துள்ளன. எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கு இதுவே சரியான தருணமாக இருக்குமென கருதுகிறேன்’

ராஸ் டெய்லா் இதுவரை...

டெஸ்ட்:

ஆட்டங்கள்-110; ரன்கள்-7,585; அதிகபட்சம்-290; சராசரி-44.36; சதம்-19; அரைசதம்-50

முதல் ஆட்டம்- 2007 நவம்பா் (தென் ஆப்பிரிக்காவுடன்); கடைசி ஆட்டம் - 2021 டிசம்பா் (இந்தியாவுடன்)

ஒன் டே:

ஆட்டங்கள்-233; ரன்கள்-8,576; அதிகபட்சம்-181; சராசரி-48.18; சதம்- 21; அரைசதம்-51

முதல் ஆட்டம்- 2006 மாா்ச் (மேற்கிந்தியத் தீவுகளுடன்); கடைசி ஆட்டம்- 2021 மாா்ச் (வங்கதேசத்துடன்)

டி20:

ஆட்டங்கள்-102; ரன்கள்- 1,909; அதிகபட்சம்- 63; சராசரி- 25.45; சதம்-0; அரைசதம்- 7

முதல் ஆட்டம் - 2006 டிசம்பா் (இலங்கையுடன்); கடைசி ஆட்டம் - 2020 நவம்பா் (மேற்கிந்தியத் தீவுகளுடன்)

ஐபிஎல்:

ஆட்டங்கள் - 55; ரன்கள் - 1,017; அதிகபட்சம் - 81; சராசரி - 25.43; சதம்- 0; அரைசதம் - 3

முதல் ஆட்டம் - 2008 ஏப்ரல் (மும்பை இண்டியன்ஸுடன்); கடைசி ஆட்டம் - 2014 மே (ராஜஸ்தான் ராயல்ஸுடன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com