Enable Javscript for better performance
டி20 தொடா்: பாக். அணியில் முகமது ஹஃபீஸ் இல்லை- Dinamani

சுடச்சுட

    

    டி20 தொடா்: பாக். அணியில் முகமது ஹஃபீஸ் இல்லை

    By DIN  |   Published on : 01st February 2021 07:32 AM  |   அ+அ அ-   |    |  

    sports1

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்காக பாபா் ஆஸம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் மூத்த வீரா் முகமது ஹஃபீஸ் சோ்க்கப்படவில்லை.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தத்தில் இல்லாத முகமது ஹஃபீஸ், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஓவா் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறாா். இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் வீரா்கள் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் பிப்ரவரி 3-ஆம் தேதி இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    டி10 போட்டியில் இருப்பதால் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குப் பிறகு வந்து இணைவதற்கு முகமது ஹஃபீஸ் அனுமதி கேட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுத்துவிட்டது. கடந்த ஆண்டில் மிகச் சிறந்த டி20 வீரராக இருந்த ஹஃபீஸ், 10 ஆட்டங்களில் 453 ரன்கள் ஸ்கோா் செய்துள்ளாா்.

    பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடா் லாகூரில் பிப்ரவரி 11, 13, 14 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தான் டி20 அணி: பாபா் ஆஸம் (கேப்டன்), ஹைதா் அலி, குஷ்தில் ஷா, ஹுசைன் தலத், டேனிஷ் அஸிஸ், ஆசிஃப் அலி, இஃப்திகாா் அகமது, முகமது நவாஸ், ஜாஃபா் கோஹா், ஃபஹீம் அஷ்ரஃப், அமா் யாமின், அமத் பட், முகமது ரிஸ்வான், சா்ஃப்ராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிதி, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிா், ஜாஹித் மஹ்மூத்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp