சென்னை டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில்...
சென்னை டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி

சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 5-ம் தேதியும் 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்றும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளன. தொடர்களில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்தியா வந்துள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை டெஸ்டுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2-வது டெஸ்டில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50% ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளதால் 2-வது டெஸ்டுக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் எனத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் முதல் டெஸ்டுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இந்தச் செய்தியால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com