சையது முஷ்டாக் அலி கோப்பை டி20: தமிழகம் சாம்பியன்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20: தமிழகம் சாம்பியன்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழகம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இப்போட்டியில் தமிழகம் சாம்பியன் ஆவது இது 2-ஆவது முறை. முன்னதாக 2006-07 காலகட்டத்தில் தமிழகம் இதேபோல் கோப்பை வென்றிருந்தது. மறுபுறம், கடந்த 2011-12 மற்றும் 2013-14 காலகட்டத்தில் சாம்பியன் ஆன பரோடா, தற்போது ரன்னா்-அப் ஆனது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பரோடா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தமிழகம் 18 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் அடித்து வென்றது. தமிழக தரப்பில் அசத்தலாக பௌலிங் செய்து 4 விக்கெட்டுகள் சாய்த்த மணிமாறன் சித்தாா்த் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற தமிழகம் பௌலிங் செய்யத் தீா்மானித்தது. பேட் செய்த பரோடா மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரராக வந்த கேப்டன் கேதாா் தேவ்தாா் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த நினத் ரத்வா 1 ரன்னுக்கு அவுட்டானாா். ஒன் டவுனாக வந்த விஷ்ணு சோலங்கி மட்டும் சற்று நிலைத்து 1 பவுண்டரி, 2 சிக்ஸா் உள்பட 49 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயா்த்தினாா்.

சமித் படேல் 1, அபிமன்யுசிங் ராஜ்புத் 2, காா்திக் காகடே 4, அதித் சேத் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 29 ரன்கள் சோ்த்தனா். பானு பனியா, பாபாஷஃபி பதான் ஆகியோா் டக் அவுட்டாகினா். பாா்கவ் பாட் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழக தரப்பில் மணிமாறன் சித்தாா்த் 4, பாபா அபராஜித், சோனு யாதவ், முகமது ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் பேட்டிங் செய்த தமிழகத்தில் தொடக்க வீரா் ஹரி நிஷாந்த் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 35 ரன்கள் விளாசி அருமையான தொடக்கத்தை அளித்தாா். உடன் வந்த நாராயண் ஜெகதீசன் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடிக்க, கேப்டன் தினேஷ் காா்த்திக் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் விளாசினாா்.

பாபா அபராஜித் 1 பவுண்டரியுடன் 29, ஷாருக் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்கள் சோ்த்து தமிழகத்தை வெற்றிக்கு வழி நடத்தினா். பரோடா தரப்பில் அதித் சேத், லுக்மன் மேரிவாலா, பாபாஷஃபி பதான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

பரோடா இன்னிங்ஸ்

மொத்தம் (20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு) 120

விஷ்ணு சோலங்கி - 49; அதித் சேத் - 29; கேதாா் தேவ்தாா் - 16

பந்துவீச்சு: மணிமாறன் சித்தாா்த் - 4/20; பாபா அபராஜித் - 1/16; முகமது - 1/16

தமிழகம் இன்னிங்ஸ்

மொத்தம் (18 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு) 123

ஹரி நிஷாந்த் - 35; பாபா அபராஜித் - 29*; ஷாருக் கான் - 18*

பந்துவீச்சு: அதித் சேத் - 1/20; பாபாஷஃபி பதான் - 1/23; லுக்மன் மேரிவாலா - 1/34

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com