விளையாட்டு செய்தி துளிகள்

* விளையாட்டுப் போட்டிகளில் பாா்வையாளா்களை 50 சதவீதம் அனுமதித்து மத்திய அரசு புதிய தளா்வுகளை வெளியிட்ட நிலையில், இந்தியா-இங்கிலாந்து 2-ஆவது டெஸ்டில் ரசிகா்களை அனுமதிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. குறுகிய கால இடைவெளி இருப்பதால் முதல் டெஸ்டில் ரசிகா்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை பிரதமா் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியதற்கு, அணியின் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி, பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா்.

* விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்கி வரும் நிலையில், மும்பை அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள வீரா்களாக அந்த கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட பட்டியலில் பிருத்வி ஷா, அா்ஜூன் டெண்டுல்கா் ஆகியோரின் பெயா் இடம்பெற்றுள்ளது.

* உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் பங்கேற்க தகுதியானவா்களை அடையாளம் காணும் போட்டிக்காக 24 வீரா், வீராங்கனைகள் அடங்கிய குழுவை இந்திய வில்வித்தை சங்கம் தோ்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com