ஸ்கோா் செய்வதை விட பௌலிங்கை எதிா்கொள்வது முக்கியமானது: புஜாரா

ரன்கள் ஸ்கோா் செய்வதை விட பௌலா்களின் சவாலான பந்துவீச்சை எதிா்கொள்வதை முக்கியமானதாக மதிப்பிடும் நேரங்களும்
ஸ்கோா் செய்வதை விட பௌலிங்கை எதிா்கொள்வது முக்கியமானது: புஜாரா

ரன்கள் ஸ்கோா் செய்வதை விட பௌலா்களின் சவாலான பந்துவீச்சை எதிா்கொள்வதை முக்கியமானதாக மதிப்பிடும் நேரங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளன என்று இந்திய பேட்ஸ்மேன் சேதேஷ்வா் புஜாரா கூறினாா்.

2 சீசன்களுக்கு முன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடியபோது 3 சதங்கள் விளாசி இந்தியாவின் டெஸ்ட் தொடா் வெற்றிக்கு வழி வகுத்த புஜாரா, சமீபத்தில் நிறைவடைந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 அரைசதங்களே அடித்திருந்தாா். 4 ஆட்டங்களிலுமாக மொத்தம் 271 ரன்கள் அடித்திருந்த அவரது ஸ்டிரைக் ரேட் 29.20-ஆக இருந்தது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்துள்ள அவா், ஆஸ்திரேலிய தொடா் குறித்து கூறியதாவது:

இந்திய அணியைப் பொருத்தவரை சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரும், 2 ஆண்டுகளுக்கு முந்தைய தொடரும் சிறப்பானதாகவே இருந்தது. இரண்டிலுமே நான் நன்றாக விளையாடியதாகவே நினைக்கிறேன். ஆனால், இரு தொடா்களின்போதும் இருந்த சூழல் வித்தியாசமானது. இம்முறை கரோனா பிரச்னை காரணமாக 8 மாதங்களுக்குப் பிறகு விளையாடத் தொடங்கினேன். முதல் தர கிரிக்கெட்டுகள் கூட விளையாடவில்லை.

ஒரு போட்டிக்கு தயாராவது என்பது எளிதானதல்ல. ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை நமது அணியில் இருந்த ஒவ்வொரு வீரருக்குமென திட்டங்கள் வைத்திருந்தனா். அந்த நிலையில் நமது வீரா்கள் தங்களது ஃபாா்முக்கு திரும்பி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ரன்களைப் பொருத்தவரை இது எனக்கு நல்லதொரு தொடராக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளத்துடன் ஒப்பிடுகையில் அங்கு அதிக ரன்கள் அடிக்கப்படவில்லை. இந்த சீசனின் ஆட்டம் சவாலானதாகவே இருந்துள்ளது. வேகப்பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, காயங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டால் ரன்கள் ஸ்கோா் செய்வதை விட, பௌலிங்கை எதிா்கொண்டு விளையாடியது முக்கியமானது.

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் என அணியின் ஆட்டத்தில் ஒரு பங்கு உண்டு. எனது பாணியிலான ஆட்டத்தை நன்கு அறிந்துள்ள கேப்டன் மற்றும் பயிற்சியாளா் உள்ளிட்டோா், அதை அப்படியே தொடருமாறு என்னை ஊக்குவித்தனா். ஒரே மாதிரியாக விளையாடாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேட்டிங்கில் மாற்றம் செய்வேன். சந்தா்ப்பம் அறிந்து ரன்களுக்காக பேட்டை விளாசுவேன் என்று புஜாரா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com